தி.மலை: நாளை நடைபெறவுள்ள மகா சிவராத்திரியை தமிழகம் முழுவதும் சிவ தலங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் வசதிக்காக கோயில் வளாகத்தில் தடுப்புகள் அமைத்தல், மற்றும் கோயில் கோபுரங்களை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
அண்ணாமலையால் கோயிலில் நாளை அதிகாலை 3 மணிக்கே நடை திறக்கப்பட்டு நான்குகால பூஜைகள் நடைபெறவுள்ளன. லிங்கோத்பவ தத்துவத்தை உணர்த்தும் விதமாக மகா சிவராத்திரியன்று இரவு மற்றும் தாழம் பூவை லிங்கோத்பவருக்கு வைத்து சிறப்பு பூஜை நடைபெறும். லிங்கோத்பவர் தரிசனத்தை நேரில் கண்டால் எந்த இன்னல்களும் வராது என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.