சமூகவலைதளங்களில் கரும்புள்ளி பிரசாரம்

2018-02-12@ 00:11:54

சென்னை: சட்டப்பஞ்சாயத்து இயக்க பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம்  வெளியிட்ட அறிக்கை:தமிழக சட்டசபை 60 ஆண்டுகள் நடந்து வைரவிழா கண்ட பாரம்பரியம் கொண்டது. அவசரஅவசரமாக சட்டசபையில் ஜெயலலிதா படம் திறக்கப்படவுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட முக்கிய குற்றவாளியின் படத்தை சட்டசபையில் மாட்டுவது தவறான முன்னுதாரணம். அதனால், சட்ட சபையில் ஜெயலலிதாவின் படத்தைத் திறக்கக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்தி கரும்புள்ளிப் பிரச்சாரத்தைத் துவங்கியுள்ளோம்.  இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!