மனைவி, 2 குழந்தைகள் இருப்பதை மறைத்து ஆசிரியையை ஏமாற்றிய பேஸ்புக் காதலன் கைது

2018-02-12@ 00:11:46

திருவண்ணாமலை:   திருவண்ணாமலையை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். எம்எஸ்சி, பிஎட் படித்துள்ளார். ஏற்கனவே சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்த இவர் தற்போது வீட்டிலேயே இருந்து வருகிறார். இவருக்கும், வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை முத்துக்கடையை சேர்ந்த கோபிநாத்(30) என்பவருக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டு, காதலாக மாறி உள்ளது. கடந்த 2015 முதல் இருவரும் காதலித்து வந்துள்ளனர். அவ்வப்போது கோபிநாத் திருவண்ணாமலைக்கு வந்து இளம்பெண்ணிடம் பேசி வந்துள்ளார். இதனால் இவர்களது நெருக்கம் அதிகமானது. அப்போது கோபிநாத் எனது பெற்றோர் சம்மதத்துடன் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை ஊட்டி, சேலம், ஏற்காடு, மூணாறு என பல்வேறு ஊர்களுக்கு அழைத்து சென்று பல முறை உல்லாசமாக இருந்துள்ளார்.

 இந்நிலையில் கோபிநாத்தின் நடவடிக்கை மீது சந்தேகம் அடைந்த இளம்பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபிநாத்தின் செல்போன் நம்பருக்கு போன் செய்துள்ளார். அப்போது போனில் பேசியவர்  தான் கோபிநாத்தின் மனைவி என தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சிடைந்த இளம்பெண் கோபிநாத் பற்றி விசாரித்துள்ளார். அப்போது அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும், அவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளம்பெண் இதுகுறித்து கோபிநாத்திடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் `எனக்கு திருமணம் ஆனது உண்மைதான். இதுபற்றி வெளியே சொன்னால் நாம் இருவரும் ஒன்றாக இருக்கும்  போட்டோ மற்றும் வீடியோவை நெட்டில் வெளியிட்டு உன்னை அசிங்கப்படுத்தி விடுவேன்’’ என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த 10ம் தேதி திருவண்ணாமலையில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இளம் பெண் புகார் செய்தார். அதன்பேரில்  இன்ஸ்பெக்டர் ஹேமமாலினி வழக்குபதிந்து கோபிநாத்தை கைது செய்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!