போபால் : ''பக்கோடா தயாரிப்பது என்பது ஒரு கலை. அதை திறம்பட செய்தால், மூன்றே ஆண்டில் ஓட்டல் திறக்கும் அளவுக்கு முன்னேறலாம்,'' என, மத்திய பிரதேச கவர்னர், ஆனந்திபென் படேல் கூறியுள்ளார்.
சமீபத்தில் ஒரு பேட்டியின்போது, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது தொடர்பாக பேசும்போது, 'பக்கோடா விற்று, தினமும், 200 ரூபாய் சம்பாதிப்பவரை,
ஏன் வேலை செய்பவராக பார்ப்பதில்லை' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், பல்வேறு விமர்சனங்களையும் செய்து வருகின்றன.இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அந்த மாநில கவர்னரும், குஜராத் முன்னாள் முதல்வருமான, ஆனந்திபென் படேல் பேசியதாவது: பக்கோடா விற்பது குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு, பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. அதற்காக போராட்டம் நடத்தி வருகின்றனர்; அதில் எந்த நியாயமும் இல்லை.
உண்மையில், பக்கோடா தயாரிப்பது என்பது ஒரு கலை. நல்ல முறையில், நல்ல சுவையாக பக்கோடா தயாரிக்காவிட்டால், அதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
ஒருவர் நல்ல பக்கோடா தயாரித்தால், முதல் இரண்டு ஆண்டுகளில் நல்ல வியாபாரம் நடக்கும்.மூன்றாவது ஆண்டில் சொந்தமாக ஓட்டல் திறக்கும் அளவுக்கு முன்னேற முடியும். நான்காவது ஆண்டில் மேலும் ஒரு ஓட்டலை திறக்கும் அளவுக்கு வளர்ச்சி காண முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (114)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply