உடற்பயிற்சியினால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்

2018-02-12@ 10:04:20

நாம் தொடர்ந்து முறையாக உடற்பயிற்சி செய்து வரும்போது நமது தசைகளில் உள்ள  நுண்துளைகளின் எண்ணிக்கை அதிகரித்து, ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். இதனால்  அதிகப்படியான ஆக்சிஜன் நமது உடலுக்கு கிடைக்கிறது. இந்த ஆக்சிஜன் ஆக்சிகரணமுற்ற கிளைக்கோஜனாக மாறி, உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது. உடற்பயிற்சியால் ஸ்கெலிட்டல் தசையிலுள்ள மயோக்ளோபின் செல்கள் அதிகரிக்கின்றன. இவை ஹீமோகுளோபினைப் போலவே அதிக ஆக்சிஜனை சேமிக்கின்றன.

உடற்பயிற்சியினால் மைட்டோகாண்ட்டிரியாக்களின் அளவும், எண்ணிக்கையும் அதிகரிக்கின்றன. இவை உணவின் சத்துக்களை அதிகளவில் ஈர்த்து ஆற்றலைத் தருகின்றன. உணவின் ஆற்றல் அதிகளவு உட்கிரகிக்கப்படுகிறது. குறிப்பாக தசைநார்கள் பெருத்து உடலுக்கு வலுவளிக்கும். புரதத்தை ஏற்றுக் கொள்ளும் ஆற்றலைப் பெருகுகின்றன. இவை தவிர முறையான உடற்பயிற்சியினால் நமது நரம்பு மண்டலத்தில் உள்ள நியூரான்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன. எனவே முறையான உடற்பயிற்சி நம்  உடலுக்கு பலவகை நன்மைகளைத் தருகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!