புதுவை: பிரதமர் மோடியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பகோடா விற்ற புதுவை முதல்வருக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முதல்வர் நாராயணசாமிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாஜவினர் அல்வா கடை திறந்து விற்பனை செய்கின்றனர். நேரு சாலையில் நாராயணசாமி என்ற பெயரில் அல்வா கடை திறந்து பாஜகவினர் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பகோடா விற்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். முதல்வர் ஆட்சிக்கு வந்து எந்த திட்டத்தையும் நிறைவேற்றாமல் அல்வா கொடுத்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.