திருச்சி: கும்பாபிஷேகத்தையொட்டி திருவானைக்காவல் சிங்கப்பெருமாள் கோயிலில் ரூ.40லட்சத்தில் திருப்பணிகள் துவங்கியுள்ளது. திருவானைக்காவலில் சிங்கப்பெருமாள் கோயில் உள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் உபகோயிலான இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. அதையடுத்து கடந்த ஐப்பசி மாதம் கோபுரத்திற்கு பாலாலயம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோயிலில் திருப்பணிகள் தொடங்கியது.
திருப்பணியையொட்டி கோபுரத்தில் மராமத்து மற்றும் வர்ணம் பூச சாரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்து ஒவ்வொரு பணிகளாக நடைபெற்ற பின்னர் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.