இந்தியாவில் முதன்முறையாக திருநங்கைகளுக்காக கேரளாவில் கூட்டுறவு சங்கம்

2018-02-12@ 00:12:46

திருவனந்தபுரம்: இந்தியாவில் முதன்முறையாக திருநங்கைகளுக்கு கேரளாவில் கூட்டுறவு சங்கம் அமைக்கப்படும் என்று கேரள தேவசம் மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார். கேரள மாநிலம் கண்ணூரில் தேசிய அளவிலான முதலாவது கூட்டுறவு மாநாடு ேநற்று தொடங்கியது. விழாவிற்கு தலைமை வகித்த கேரள கூட்டுறவு துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் பேசியதாவது: கேரளாவில் திருநங்கைகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் முதன்முறையாக கேரளாவில் தான் திருநங்கைகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன.

தற்போது முதன்முறையாக ேகரளாவில் திருநங்கைகளுக்காக கூட்டுறவு சங்கம் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு சுய தொழில் செய்யவும் தன்னிறைவு பெறுவதற்காகவும் உதவிகள் செய்யப்படும். கூட்டுறவு சட்டத்தின்படி ேதவைப்படும் உறுப்பினர்கள் சேரும் மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்படும். கேரளாவில் சில கூட்டுறவு வங்கிகளில் கவரிங் நகைகளை அடகு ைவத்து மோசடி செய்வதாக ஏராளம் புகார்கள் வந்துள்ளன. இதை தடுக்க வங்கிகளில் நகைகள் உண்மையானவையா என்று கண்டுபிடிக்க அதிகாரிகள் கொண்ட அதிரடிப்படை அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!