கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக பகோடாவை முன்வைக்கும் காங்கிரஸ்

2018-02-12@ 17:55:59

பெங்களூரு: பிரதமர் மோடிக்கு எதிரான போராட்ட சின்னமாகிவிட்ட பகோடா கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. கர்நாடகாவில் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சாலையோர கடையில் பகோடா சாப்பிட்டார். அப்போது கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்களும் உடன் இருந்தனர்.
 
பகோடா விற்பது கூட ஒரு வேலை வாய்ப்பு தான் என்ற பிரதமர் மோடியின் கூற்று, படித்த இளைஞர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதனை சாதகமாக்கி கொள்ளவே சட்டப்பேரவை தேர்தலை எதிர்நோக்கியுள்ள கர்நாடகாவில் காங்கிரசும் பகோடாவை முன்னிறுத்தியுள்ளது.  

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!