அரசியல் சட்ட நெறிமுறை களுக்கே எதிராக ஊழல் குற்றவாளி ஒருவரின் படத்தை சட்டமன்றத்திற்குள் திறந்து வைப்பது சட்டமன்ற வரலாற்றில் ஒரு கருப்பு நடவடிக்கை.
- திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.
ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவருக்கு சட்டப்பேரவை வளாகத்தில் படம் திறப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும்.
- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன்.
தமிழகத்தில் பாஜ கால் மட்டுமல்ல, கையைக்கூட ஊன்ற முடியாது.
- தேமுதிக தலைவர் விஜயகாந்த்
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்து, நேர்மையாக தேர்வு எழுதியவர்களுக்கு பெரும் துன்பத்தை அரசு உருவாக்கி உள்ளது.
- சுயேச்சை எம்எல்ஏ டிடிவி.தினகரன்.