நாமக்கல்: தமிழகம், ஆந்திரா, கேரளா, பாண்டிச்சேரி, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களில் சமையல் எரிவாயு ஏற்றிச்செல்லும் பணியில் 4200 காஸ் டேங்கர் லாரிகள் ஈடுபடுகின்றன. ஐ.ஓ.சி., பி.பி.சி., எச்.பி.சி. ஆகிய 3 ஆயில் நிறுவனங்கள் தற்போது அறிவித்துள்ள அடுத்த 5 ஆண்டுக்கான புதிய வாடகை டெண்டரில் இடம்பெற்றுள்ள பல்வேறு நிபந்தனைகளை எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து, இன்று(12ம் தேதி) முதல் 4200 டேங்கர் லாரிகளையும் இயக்காமல் நிறுத்தி வைக்கப்போவதாக அச்சங்கத்தின் தலைவர் பொன்னம்பலம் நேற்று முன்தினம் நாமக்கல்லில் அறிவித்தார். அதன்படி, இன்று காலை 8 மணி முதல் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்குகிறது. இதனால், 6 மாநிலங்களிலும் விரைவில் சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகும்.