பயிற்சி செல்போனுக்கு ‘ஆப்பு’

2018-02-11@ 00:48:52

தமிழக காவல்துறையில் புதிதாக பணியில் சேர்ந்த நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 250 பெண் காவலர்களுக்கு பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 மாதங்களாக அவர்கள் காவல் துறையில் எப்படி பணியாற்றுவது, அவசர சூழ்நிலைகளை எப்படி சமாளிப்பது, உயர் அதிகாரிகளிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும், போலீஸ் பணியில் எவ்வாறு சிறப்பாக பங்களிக்க வேண்டும் என்பது குறித்து கள பயிற்சி பெற்று வருகின்றனர். மொத்தம் 7 மாதம் பயிற்சி அளிக்கப்படும்.

இவர்களுக்கு பாளை ஆயுதப்படை மற்றும் மணிமுத்தாறு பட்டாலியனை சேர்ந்த 11 போலீசார் பயிற்சி அளித்து வருகின்றனர். கடந்த காலங்களில் சீனியர் காவலர்களே புதிதாக தேர்வு செய்யப்பட்ட காவலர்களுக்கு பயிற்சி அளிப்பது வழக்கம். தற்போது இளம் காவலர்களை வைத்து இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் பயிற்சி காவலர்கள் தங்கள் செல்போன் மூலம் பெண் போலீசாரை படம் எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக மாவட்ட எஸ்.பி. அருண் சக்திகுமாருக்கு தகவல் சென்றது. இதையடுத்து பயிற்சி காவலர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!