கலாசாரத்தை மதிக்காத சுற்றுலா பயணிகளை விரட்டுவேன்: கோவா சுற்றுலா அமைச்சர் சர்ச்சை பேச்சு

2018-02-11@ 16:22:53

பனாஜி: கோவா கலாசாரத்தை மதிக்காத சுற்றுலா பயணிகளை விரட்டுவேன் என மாநில சுற்றுலா அமைச்சர் மனோகர் அன்கோன்கர் தெரிவித்துள்ளார்.
கோவாவில் மாநில உணவு மற்றும் கலாசார விழாவை துவக்கிவைத்தபின் பேசிய அமைச்சர் மனோகர் அன்கோன்கர் கோவாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள கலாசாரத்தையும் மக்களையும் மதிப்பதில் கவனம் செலுத்த வேண்டும், இல்லையென்றால் அவர்களை நான் விரட்டுவேன் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து யார் சொன்னாலும் நான் கேட்க மாட்டேன் என்று தெளிவாக கூறியுள்ளார். மேலும் போதை மருந்து விற்கும் சுற்றுலா பயணிகளும், ஓட்டலும் நமக்கு வேண்டாம் என்று கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!