சென்னையில் தொடரும் வழிப்பறி : பைக் கொள்ளையர்கள் பெண்ணிடம் நகை பறித்து தரதரவென இழுத்துச் செல்லும் காட்சிகள் வெளியீடு

2018-02-11@ 15:53:57

சென்னை: சென்னையில் தொடரும் வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சென்னை அரும்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட காட்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வள்ளலார் நகரில் சாலையில் நடந்து சென்ற மேனகாவிடம் 15 சவரன் நகை பறிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நகை பறிக்கும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. நகையுடன் பெண்ணை சாலையில் தரதரவென இழுத்துச் செல்லும் காட்சிகள் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது. சாலையில் இழுத்துச்செல்லப்பட்டதில் மேனனாவுக்கு கழுத்து, கை, முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் பெண்கள் வெளியே நகை அணிந்து வெளியே வர அச்சமடைந்துள்ளனர்.

பூந்தமல்லி அருகே பெண்ணிடம் நகை பறிப்பு

பூந்தமல்லி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் மர்ம நபர் நகையை பறித்து செல்வது சிசிடிவியில் காட்சி மூலம் வெளியாகியுள்ளது. குன்றத்தூரைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர் அவரது மனைவி ஜெயஸ்ரீவுடன் கடைக்கு சென்று வீடு திரும்பினார். அப்போது பின்னால் வந்த மர்ம நபர் ஜெயஸ்ரீ கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் நகையை பறித்து கொண்டு ஓடினார். நிலைத்தடுமாறி கீழே விழுந்த பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் நகை பறித்த கொள்ளையனை துறத்தி சென்றனர். ஆனால் அதற்குள் கொள்ளையன் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றான். சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!