காஷ்மீர் சட்டப்பேரவையில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம்

2018-02-11@ 01:01:26

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் நேற்று அதிகாலை சஞ்சவான் ராணுவ முகாமில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இரண்டு வீரர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் நேற்று காஷ்மீர் சட்டப்பேரவையில் எதிரொலித்தது. பாஜ எம்எல்ஏக்கள் பாகிஸ்தானுக்கு எதிரான கோஷத்தை எழுப்பினார்கள். அப்போது திடீரென பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி எம்எல்ஏ அக்பர் லோன் என்பவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினார். இதனால் சட்டப்பேரவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டப்பேரவைக்கு வெளியே வந்த அவர் கூறுகையில்,’ நான் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சட்டப்பேரவையில் கோஷம் எழுப்பியது உண்மைதான். இது என்னுடைய தனிப்பட்ட பார்வை. அதை நான் சட்டப்பேரவையில்தான் தெரிவித்தேன். இதனால் வேறு பிரச்னைகள் வருமா என்பது எனக்கு தெரியாது’ என்று கூறினார். எம்எல்ஏவின் இந்த கோஷத்திற்கு அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவும் தனது கட்சி எம்எல்ஏ.வை கண்டித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!