கருணாநிதியை சந்திக்கிறார் கமல் | எக்ஸ் வீடியோவுக்கு ஏ சான்றிதழ் | சாட்சிகள் சொர்க்கத்தில்: இலங்கை தமிழ் அகதிகள் பற்றிய படம் | ஒய்.ஜி.மகேந்திரன் மகன் திருமணம்: திரையுலகினர் வாழ்த்து | பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா: 22ந் தேதி தொடங்குகிறது | பார்த்திபன் மகள் திருமணத்தில் சீதா பங்கேற்கிறார் | மார்ச் 1ந் தேதி முதல் சினிமா ஸ்டிரைக்: திரையரங்க உரிமையாளர்கள் திருச்சியில் கூடுகிறார்கள் | காலா ரிலீஸ் திடீர் அறிவிப்பு, சரியா ? | கலகலப்பு 2, சுந்தர் சி சம்பளம் 10 கோடி ? | குதிரை ஏறிய சன்னி லியோன் |
தனுஷின் படத் தயாரிப்பு நிறுவனமான ஒண்டர் பார் பிலிம்ஸ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ள படம் காலா. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 27ம் தேதி வெளியாகும் என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்தத் தேதியில் முதலில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம்தான் வருவதாக இருந்தது. ஆனால், அப்படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் முடிவடையாததால் அந்தப் படம் மேலும் தள்ளிப் போனது.
அந்தத் தகவலை அறிந்த சில தயாரிப்பாளர்கள் ஏப்ரல் 27ம் தேதி அவர்களது படங்களை வெளியிட திட்டமிட்டார்கள். அதன்படி மிஸ்டர் சந்திரமௌலி படம் ஏப்ரல் 27ம் தேதி வெளியாவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. மேலும் சில தயாரிப்பாளர்கள் அன்று படங்களை வெளியிட முடிவு செய்திருந்த நிலையில் காலா படத்தை அந்தத் தேதியில் வெளியிட அறிவித்துவிட்டதால் அவர்களது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார்கள்.
காலா ஏப்ரல் 27ம் தேதி வெளியாவதால், மிஸ்டர் சந்திரமௌலி படத்தைத் தள்ளி வைப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் அறிவித்துள்ளார். “ஏப்ரல் 27ம் தேதி காலா வருவதால் வேறு யாராலும் அன்று நிற்க முடியாது. ஏப்ரல் 27ம் தேதி எங்களது மிஸ்டர் சந்திரமௌலி படம் வெளியாகும் என்று முதலில் அறிவித்தோம். இப்போது வெளியீட்டுத் தேதியை மாற்றியமைத்து அறிவிக்க வேண்டும்,” எனத் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் போன்ற நடிகர்கள் நடித்து படங்கள் வெளிவரும் போது முன்னர் அறிவிக்கப்பட்ட சிறிய படங்கள் பாதிப்படைவது நியாயமே இல்லை. தமிழ்நாட்டு அரசியலில் சிஸ்டம் சரியில்லை என்று கூறும் ரஜினிகாந்த் அவருடைய பட வெளியீட்டு சிஸ்டத்தை மாற்றி சிறிய படங்களுக்கும் வழி விடுவாரா ?. முதலில் அவருடைய திரைத்துறை சார்ந்த சிஸ்டத்தை சரி செய்யட்டும் என்று கோலிவுட்டில் நேற்று முதலே குரல்கள் எழ ஆரம்பித்துவிட்டன.