சுவிட்சர்லாந்தின் லுசெர்னி நகரில் பிப்ரவரி மாதத்தில் நடக்கும் பாரம்பரிய பேய் திருவிழா இந்தாண்டும் களை கட்டியது. சேப்பல் ஆற்றுப்பாலத்தில் நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு விதமான முகமூடிகளை அணிந்து உற்சாகமாக பங்கேற்றனர். 15ம் நூற்றாண்டு முதல் இத்திருவிழா கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.