தமிழில் வெளிவருகிறது பசிபிக் ரிம் 2 | சினிமாவில் ஹீரோவாக ஜெயிப்பரா ராஜ்கமல்? | மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய பழம்பெரும் இயக்குனர் | பேட்மேன் படத்திற்கு பாகிஸ்தானில் தடை | கொரில்லாவுடன் பழகும் ஜீவா | என் மகளுக்கு துளியும் சினிமா ஆசையில்லை: ரேகா | காலா சண்டைக்காட்சி லீக் : படக்குழு அதிர்ச்சி | என்னை வியாபாரம் செய்ய முயற்சித்தார் : அமலாபால் | காலா - பாட்ஷா ஒரு ஒப்பீடு | கருணாநிதியை சந்திக்கிறார் கமல் |
பரத் நடித்த பொட்டு படத்தை அடுத்து வி.சி.வடிவுடையான் இயக்கும் படம் 'வீரமாதேவி'. கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது.
சரித்திர கதையான இப்படத்தில் சன்னிலியோன் நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அதைப் பற்றி கவலைப்படாமல் படப்பிடிப்பை துவக்கினார்கள். முதல்நாள் படப்பிடிப்பில் சன்னிலியோன் குதிரையில் சவாரி செய்வது போல் காட்சி படமாக்கப்பட்டது. ஜெய் நடித்த 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய சன்னி லியோன் பல வருட இடைவெளிக்குப் பிறகு தமிழ்ப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
'வீரமாதேவி' படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகவிருப்பதால் இந்தப் படத்தை தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.