மார்ச் 9-ல் காளிதாஸின் 'பூமரம்' பூப்பது உறுதி | அடுத்தடுத்த படங்களில் தீவிரம் காட்டுகம் திலீப் | வட அமெரிக்க விருதுகளை கைப்பற்றிய துல்கர்-பஹத் பாசில்..! | தமிழில் வெளிவருகிறது பசிபிக் ரிம் 2 | சினிமாவில் ஹீரோவாக ஜெயிப்பரா ராஜ்கமல்? | மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய பழம்பெரும் இயக்குனர் | பேட்மேன் படத்திற்கு பாகிஸ்தானில் தடை | கொரில்லாவுடன் பழகும் ஜீவா | என் மகளுக்கு துளியும் சினிமா ஆசையில்லை: ரேகா | காலா சண்டைக்காட்சி லீக் : படக்குழு அதிர்ச்சி |
அமெரிக்கா சென்றுள்ள நடிகர் கமல் ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூல் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வந்து, வணக்கம் எனக் கூறி பேச்சை தொடங்கிய கமல், நாளை நமதே என உரையை முடித்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது : 2018-ல் அரசியல் பயணத்தை துவக்கும் நான் கிராமங்களில் இருந்து மாற்றத்தை துவங்குகிறேன்.இந்த மாற்றத்திற்கு அனைவரின் பங்களிப்பை நான் எதிர்பார்க்கிறேன். நான் தேர்தெடுக்கும் கிராமங்களை முன்னோடி கிராமங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளேன். திட்டங்களை அமல்படுத்துவதில் குறைகள் உள்ளன. இதுவே மாநில அரசி்ன் நிதிச்சுமைக்கு காரணமாக உள்ளது. ஓட்டுக்கு பணம் வாங்கினால் நமது பாக்கெட்டில் இருந்து அரசியல்வாதிகள் பணத்தை எடுக்கும் போது நாம் கேள்வி கேட்க முடியாது.
பெரியார், காந்தி ஆகியோர் தேர்தல் அரசியலுக்கு செல்லவில்லை. ஆனால் இவர்கள் மக்களுக்காக போராடினார்கள். தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து பணியாற்ற திட்டமிட்டுள்ளேன். தேர்தல் அரசியலை தாண்டி பெரியார் ,காந்தி எனது ஹீரோக்கள்.
நான் வித்தியாசமானவர் என கூறவில்லை. அரசியலில் வித்தியாசமானவனாக இருக்க விரும்புகிறேன். எனது நோக்கமும், ரஜினியின் நோக்கமும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது தான். இருப்பினும் ரஜினியுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லை.
ஆளும் அரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உள்ளது. அரசியலில் ஈடுபடாமல் கேள்விகள் மட்டுமே கேட்டுக்கொண்டிருப்பது ஏன் என்ற கேள்வியையும் நாம் எழுப்ப வேண்டிய தருணம் இது. ஒரு கல்லூரி விழாவில் நான் அரசியல்வாதி என கையெழுத்திட்டு அறிவித்துக் கொண்டேன். இந்த மேடையில் 2வது முறையாக என்னை அரசியல்வாதியாக அறிவித்துக் கொள்கிறேன்.
37 வருடங்களாக அரசியலில் இருந்து வருகிறேன்.காந்தி, பெரியார் போல நேரடி அரசியலுக்கு வரவேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். தற்போது நேரடி அரசியல் செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளதாக உணர்கிறேன். ஆரோக்கியமான தமிழகத்தை உருவாக்குவதே நோக்கம்.
ரஜினியின் அரசியல் கொள்கையில் காவி இல்லை என நான் நினைக்கவில்லை, எனது அரசியல் கொள்கையின் நிறம் கருப்பு. நான் சைவம் அல்ல. ஆனால் மாட்டுக்கறி உண்ண மாட்டேன். மாட்டுக்கறி உண்ணக் கூடாது எனவும் சொல்ல மாட்டேன். மக்கள் இதைத்தான் சாப்பிட வேண்டும் என சொல்லக் கூடாது.
எனது கட்சி தனிமனித கட்சியாக இருக்காது..2, 3, 4வது கட்ட தலைவர்கள் இருப்பார்கள்.தமிழன் என்பது முகவரிதான், தகுதி அல்ல. நாளை நமதே. இவ்வாறு கமல் பேசினார்.