லட்சக்கணக்கில் மோசடி செய்த தம்பதி கைது

2018-02-11@ 01:11:37

சென்னை: திருவல்லிக்கேணி டாக்டர் நடேசன் சாலையை சேர்ந்த ஜோதிலட்சுமி (59). ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ராயப்பேட்டை ரோட்டேரி நகரை சேர்ந்த பூங்கோதை மற்றும் அவரது கணவர் குட்டி ஆகியோர் மாத சீட்டு நடத்தி 10 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றி வருகின்றனர். அவர்களை பற்றி விசாரித்த போது அவர்கள் இருவரும் இது போன்று பலரை நம்ப வைத்து ஏமாற்றியது தெரியவந்தது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதுகுறித்து ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் அவர்கள் மோசடி செய்தது உறுதியானது. இதையடுத்து இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!