அதிமுகவை பாதுகாக்காவிட்டால் தெருவில்தான் நிற்க வேண்டும் : தம்பிதுரை பேச்சு

2018-02-11@ 14:49:40

கரூர்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் எம்.ஜி.ஆர் 101வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நடந்த கொடியேற்று விழாவில் பங்கேற்ற மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை பேசுகையில், ‘நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டு உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு மூன்றரை ஆண்டு உள்ளது. கடந்த ஒரு ஆண்டாக என்னால் இங்கு சரிவர வரமுடியாததற்குக் காரணம், ஜெயலலிதா மரணம் மற்றும் பல்வேறு பிரச்னைகள். தற்போது அனைத்தும் தெளிவாகி விட்டது. எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக் காத்த இந்த இயக்கத்தை பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் தெருவில்தான் நிற்க வேண்டும்’ என்றார்.

முன்னதாக தம்பிதுரை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், பெரியார் உருவாக்கிய திராவிடர் இயக்கத்தை, அண்ணா போன்றோர் வழிநடத்தி சென்றனர். பின்னர், இதன் வழி வந்த அதிமுகவை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் திறம்பட நடத்திக் காட்டினர். அப்படிப்பட்ட இயக்கத்தை அழிக்க நினைப்பது தவறானது’ என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!