விரைவில் கலகலப்பு-3 : தயாராகும் சுந்தர்.சி | கார்த்திக் படத்தை காத்திருக்க வைத்த காலா | ஸ்கெட்ச் தெலுங்குப் பதிப்பில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | அரசியலில் எதிரிகளாகும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் | மம்முட்டியின் 'மாமாங்கம்' படப்பிடிப்பு துவங்கியது | மோகன்லால் படத்தில் முக்கிய வேடத்தில் 'மாரி-2 வில்லன் | நிவின்பாலி பட வெற்றிக்கு பிரதாப் போத்தன் வருத்தம் கலந்த மகிழ்ச்சி..! | லாரியில் மணமக்களை அழைத்துவந்த மோகன்லால் பட இயக்குனர்..! | பாலசந்தர் அலுவலகங்கள் ஏலம் | புருவத்தால் புயலைக் கிளப்பிய பிரியா வாரியர் |
பார்த்திபன்-சீதா தம்பதிகளின் மகள் கீர்த்தனாவுக்கு வருகிற மார்ச் 8 ந் தேதி திருமணம் நடக்கிறது. பார்த்திபன், சீதா தம்பதிகள் விவாகரத்து செய்துவிட்டு பிரிந்து வாழ்கிறார்கள். கீர்த்தனாவும், பார்த்திபனின் வளர்ப்பு மகன் ராக்கியும் பார்த்திபனுடன் இருக்கிறார்கள். இன்னொரு மகள் அபிநயா சீதாவுடன் இருக்கிறார். கீர்த்தனாவின் திருமணத்தில் சீதா கலந்து கொள்வார் என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
என் மகள் கீர்த்தனாவின் திருமணம், மகளிர் தினத்தில் நடக்கிறது. அன்று, மகளிருக்கு உரிய மரியாதையை எல்லா ஆண் மகன்களும் செய்ய வேண்டும். என் வாழ்க்கை என் அம்மாவில் தொடங்கி மகள் வரை வந்து இருக்கிறது. எந்த உறவுக்கும் பிரிவு என்று ஒன்று வரலாம். ஆனால், அம்மா என்ற உறவு இதற்கெல்லாம் அப்பாற்பட்டது. கீர்த்தனாவின் திருமணத்தில், கீர்த்தனாவின் அம்மாவும், அவர் அம்மாவும், அக்ஷய் (மணமகன்)அம்மாவும், அவர் அம்மாவும், என் அம்மாவும், இன்னும் நிறைய அம்மாக்களும் சேர்ந்து சிறப்பாக நடத்தி வைப்பார்கள் என்கிறார் பார்த்திபன்.