ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் பயங்கரவாதிகள் தாக்குதல்: வீரமரணம் அடைந்த வீரர்கள் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

2018-02-11@ 11:49:42

காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் வீரமரணம் அடைந்த வீரர்கள் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் சுஞ்சுவான் என்ற இடத்தில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். மேலும் ராஜவுரி மாவட்டம் நான்சராவிலும் பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கில் போடப்பட்ட தீவிரவாதி அப்சல் குருவின் 5வது நினைவு தினத்தை நேற்று முன்தினம் காஷ்மீர் பிரிவினைவாதிகள் அனுசரித்தனர். இதை முன்னிட்டு, ராணுவ முகாம்கள் மீது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

எச்சரித்தபடியே, காஷ்மீரில் உள்ள சஞ்சவான் ராணுவ முகாம் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் நேற்று அதிகாலை புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த முகாமின் அருகில் உள்ள ராணுவ குடியிருப்பின் வழியாக நள்ளிரவில் ரகசியமாக ஊடுருவிய தீவிரவாதிகள், யாரும் எதிர்பாராத வகையில் முகாம் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில், மதன்லால் மற்றும் முகமது அஷ்ரவ் என்ற 2 வீரர்கள் கொல்லப்பட்டனர்.  
ஆறு பெண்கள், குழந்தைகள் உட்பட, ஒன்பது பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களை முதல்வர் மெஹபூபா முப்தி நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த 3 வீரர்கள் இன்று வீரமரணம் அடைந்ததை தொடர்ந்து உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. ராணுவ வீரர்களின் பதிலடியில் 3 ஜெய்ஷ் இ பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், அங்கு பயங்கரவாதிகள் யாரும் பதுங்கியுள்ளனரா என தேடும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு முழுதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் மேலும் கூறுகையில், “தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் எண்ணிக்கை தெரியவில்லை.

ஆயினும் முதல்கட்ட தகவல்களின் அடிப்படையில் 3 முதல் 4 தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் இருந்து தப்பிய தீவிரவாதிகள் முகாமின் அருகில் பதுங்கி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். அவர்களை பிடிக்க தொடர் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!