சூர்யாவை தொடரும் 4 மில்லியன் பேர் | மூன்று நாளில் ரூ.40 கோடி - பட்டைய கிளப்பும் பேட் மேன் வசூல் | விரைவில் கலகலப்பு-3 : தயாராகும் சுந்தர்.சி | கார்த்திக் படத்தை காத்திருக்க வைத்த காலா | ஸ்கெட்ச் தெலுங்குப் பதிப்பில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | அரசியலில் எதிரிகளாகும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் | மம்முட்டியின் 'மாமாங்கம்' படப்பிடிப்பு துவங்கியது | மோகன்லால் படத்தில் முக்கிய வேடத்தில் 'மாரி-2 வில்லன் | நிவின்பாலி பட வெற்றிக்கு பிரதாப் போத்தன் வருத்தம் கலந்த மகிழ்ச்சி..! | லாரியில் மணமக்களை அழைத்துவந்த மோகன்லால் பட இயக்குனர்..! |
வருகிற மார்ச் 1ந் தேதி முதல் புதிய திரைப்படங்கள் திரையிடப்படாது என்று தயாரிப்பாளர் சங்கம் ஸ்டிரைக் அறிவித்துள்ளது. இதனால் தியேட்டர்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசிக்க தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்களின் அவரக்கூட்டம் வருகிற 17ந் தேதி திருச்சியில் நடக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தனது உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
நமது திரையரங்குகளின் தற்போதைய நிலை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. அதுவும் கடந்த 3 மாதங்களாக வசூல் மிக மோசமாகி நம் திரையரங்கு தொழில் முடங்கும் ஆபத்தில் உள்ளது. மற்ற அமைப்பினரின் நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டியதுள்ளது, மத்திய, மாநில அரசுகளிடம் நம் தொழில் பிரச்சினைகளை எடுத்துச் செல்ல வேண்டியது உள்ளது. பிற துறையினரால் ஏற்படும் சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
அதனால் நாம் அனைவரும் ஒன்று கூறி தற்போதைய நிலை குறித்து ஆராய்ந்து நல்லதொரு மாற்றம் காண வேண்டிய நிலையில் இருக்கிறோம். அதனால் வருகிற 17ந் தேதி திருச்சி மாயாஸ் ஓட்டலில் நடக்கும் சிறப்பு அவசரக்கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.