பஜாஜ் புதிய டிஸ்கவர் 110 மற்றும் 125 பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் பஜாஜ் லைன்-அப்பில் உள்ள டிஸ்கவர் 100 சிசி மாடலுக்கு, புதிய மாற்றாக டிஸ்கவர் 110 சிசி பைக் வெளிவந்துள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள பஜாஜ் டிஸ்கவர் 110 பைக், ஒரே ஒரு வேரியன்டில் மட்டுமே கிடைக்கும். ஆனால், அதிக திறன்பெற்ற டிஸ்கவர் 125 மாடலுக்கு கூடுதலாக இரண்டு வேரியண்டுகள் உள்ளன. டிஸ்கவர் 125 பைக், வேரியன்டுக்கு ஏற்றதுபோல் கூடுதல் விலை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. பஜாஜ் டிஸ்கவர் 110 மற்றும் டிஸ்கவர் 125 பைக்குகளில் சிறப்பம்சங்கள் பல உள்ளன. முற்றிலும் புதிய டிஸ்கவர் 110 பைக்கில், 115.5 சிசி 4 ஸ்ட்ரோக், ஏர் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் டிடிஎஸ்-ஐ இன்ஜின் உள்ளது.
இது, 8.48 பிஎச்பி பவர் மற்றும் 9.81 என்.எம் டார்க் திறனை வழங்கும். 2018 பஜாஜ் டிஸ்கவர் 125 பைக்கில், ஏர்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் 124.6 திறன் பெற்ற இன்ஜின் உள்ளது. இது, அதிகபட்சமாக 10.84 பிஎச்பி பவர் மற்றும் 11 என்.எம் டார்க் திறனை வழங்கும். 2018 பஜாஜ் டிஸ்கவர் லைன்-அப்பில் வெளிவந்துள்ள இந்த புதிய பைக்குகளில் செல்லுலோஸ் அடித்தளம் கொண்ட கிளட்ச் கியர்பாக்ஸ் தேவையை பூர்த்திசெய்கிறது. மேலும், நிலையான சஸ்பென்ஷன் தேவை இதன்மூலம் கிடைப்பதால், டிஸ்கவரின் இப்புதிய வரவுகள் சொகுசான ஓட்டத்தை ரைடருக்கு வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. புதிய 2018 டிஸ்கவர் 110 மற்றும் டிஸ்கவர் 125 பைக்குகள் பார்ப்பதற்கு 2017 டிஸ்கவர் வெர்ஷன்போல் தோன்றினாலும், பல புதிய அம்சங்கள் மற்றும் வடிவமைப்புகள் இந்த ரக பைக்குகளில் பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ளன. பைக்கின் முன்பகுதி எல்இடி டிஆர்எல் முகப்பு விளக்குகள் பார்ப்பதற்கு திருப்பிவைக்கப்பட்ட மாட்டின் கொம்புகள் போல காட்சியளிக்கின்றன.
தானாக இயங்கும் திறன்பெற்ற இந்த முகப்பு விளக்குகள் இயங்க குறைந்தளவிலான மின்சாரமே போதும் என பஜாஜ் தெரிவித்துள்ளது. டிஸ்கவர் 110 மற்றும் 125 பைக்குகள் உயர் ரக டிஜிட்டல் ஸ்பீடோமீட்டரை பெற்றுள்ளது. இதில் எரிவாயு திறன், ஓடோமீட்டார் மற்றும் டிரிம் மீட்டர் ஆகியவை உள்ளன. பைக்கின் ரீவ்-கவுன்டர் அனலாக் யூனிட் வடிவிலே உள்ளது. புதிய டிஸ்கவர் லைன்-அப்பில் புதிய ரக பக்கவாட்டு பேனல்கள், கருப்பு நிறத்திலான சிலந்தி வடிவிலான அலாய் சக்கரங்கள், இரண்டு முறை தைக்கப்பட்ட இருக்கை அமைப்பு மற்றும் டெயில்-லேம் பீசெல் ஆகியவை உள்ளன. மேலும், 2018 பஜாஜ் டிஸ்கவர் 110 மற்றும் 125 பைக்குகள் கருப்பு, நீலம் மற்றும் சிவப்பு என மூன்று நிறங்கள் கொண்ட தேவைகளில் வெளிவருகிறது. 2018 டிஸ்கவர் லைன்-அப் மூலம் பஜாஜ் நிறுவனம், பயணிகள் ரக பைக் செக்மென்டிற்கு புதிய உற்சாகத்தை பாய்ச்சியுள்ளது. இதில், புதிய ரக டிஸ்கவர் 110 பைக்கிற்கு ரூ.50,176 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) என்ற விலை அறிவிக்கப்பட்டுள்ளது. டிஸ்கவர் 125 பைக்கிற்கு ரூ. 53,171 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) ஆரம்ப விலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.