சூர்யாவை தொடரும் 4 மில்லியன் பேர் | மூன்று நாளில் ரூ.40 கோடி - பட்டைய கிளப்பும் பேட் மேன் வசூல் | விரைவில் கலகலப்பு-3 : தயாராகும் சுந்தர்.சி | கார்த்திக் படத்தை காத்திருக்க வைத்த காலா | ஸ்கெட்ச் தெலுங்குப் பதிப்பில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | அரசியலில் எதிரிகளாகும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் | மம்முட்டியின் 'மாமாங்கம்' படப்பிடிப்பு துவங்கியது | மோகன்லால் படத்தில் முக்கிய வேடத்தில் 'மாரி-2 வில்லன் | நிவின்பாலி பட வெற்றிக்கு பிரதாப் போத்தன் வருத்தம் கலந்த மகிழ்ச்சி..! | லாரியில் மணமக்களை அழைத்துவந்த மோகன்லால் பட இயக்குனர்..! |
சூர்யா-கே.வி.ஆனந்த் கூட்டணி அயன், மாற்றான் ஆகிய படங்களில் இணைந்தனர். இதில் அயன் சூப்பர் ஹிட்டானது. மாற்றான் படத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்தார் சூர்யா. அதன்பிறகு அநேகன், கவண் படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் மீண்டும் மூன்றாவது முறையாக சூர்யாவுடன் இணைகிறார்.
தற்போது செல்வராகவன் இயக்கும் தனது 36-வது படத்தில் நடித்து வரும் சூர்யா, இந்த படத்தை முடித்ததும் வருகிற மே மாதம் முதல் கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. பிப்ரவரி 5-ந்தேதி இந்த படத்தின் பூஜை சென்னையிலுள்ள லைகா நிறுவன அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இதையடுத்து ப்ரீ புரொடக்சன்ஸ் வேலைகளை தொடங்கியுள்ள கே.வி.ஆனந்த் இந்த படத்தில சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க சில முன்னணி இந்தி நடிகைகளிடம் கால்சீட் பேசி வருகிறார்.