சென்னை: ஜெயலலிதா படத்தை திறந்து சட்டப்பேரவை மாண்பை குலைக்கக் கூடாது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஜெயலலிதா ஊழல் குற்றவாளி என்று உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா படத்தை பேரவையில் திறப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அவர் தெரிவித்துள்ளார்.