காலா ரிலீஸ் தேதி(ஏப்.27)அறிவிப்பு | கேரளாவில் வெளியாகும் நாச்சியார் | 4 ஆண்டுகளுக்கு பின் மலையாளத்தில் சுகன்யா | நிவின்பாலியின் நடிப்பை பாராட்டிய பிருத்விராஜ் | முதல்நாளில் ரூ.10.25 கோடி வசூலித்த பேட் மேன் | பிரியங்கா சோப்ராவின் முதல் அசாம் படம் அறிவிப்பு | தில் ஜூங்கிலி ரிலீஸ் தள்ளி வைப்பு | ராசியுடன் மோதும் பிரை டே | தனுஷின் ஹாலிவுட் பட டீஸர் வெளியானது | பிகினியில் சமந்தா : விமர்சித்தவர்களுக்கு பதிலடி |
இதற்குத்தானா ஆசைப்பட்டாய் கோகுல் இயக்கத்தில் 'ஜுங்கா' ன்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இப்போது அவர் நடித்து வரும் படங்களில் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் இது.
'ஜுங்கா' படத்தில் டான் ஆக நடிக்கிறார் விஜய்சேதுபதி. சீனியர் டான் ஆக ராதாரவி நடிக்கிறார். ஜுங்கா படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த படத்தின் ஆடியோ விநியோக உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.
சித்தார்த் விபின் இசையில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் சிங்கிள் டிராக் காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அனைத்து பாடல்களும் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் சாயிஷா, மடோனா செபாஸ்டியன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ஜுங்கா படத்தை அடுத்து மேலும் இரண்டு படங்களை விஜய்சேதுபதி தயாரிக்க இருக்கிறார்.