தாம்பரம்: தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை, துர்கா நகரை சேர்ந்தவர் சரண்ராஜ் (24). இவர் குரோம்பேட்டை எம்.ஐ.டி. கேட் அருகே உள்ள ஹார்டுவேர்ஸ் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். சரண்ராஜ் குரோம்பேட்டை, லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி ஒருவரை காதலித்து கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, பெண்ணின் பெற்றோர் குரோம்பேட்டை போலீசில் அளித்த புகாரின் பேரில், சரண்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.