புதுடில்லி : 'நிடி ஆயோக்' அமைப்பின் சுகாதார குறியீட்டு பட்டியலில், சிறந்த மாநிலங்களில், கேரளாவுக்கு முதலிடமும், தமிழகத்திற்கு மூன்றாமிடமும் கிடைத்துள்ளது.
மத்திய அரசுக்கு, திட்டங்கள் உருவாக்கலில் ஆலோசனை கூறும் அமைப்பான, நிடி ஆயோக், மாநிலங்களில் உள்ள சுகாதார
துறையின் வளர்ச்சி குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டது. இதில், கேரளா முதலிடத்திலும், பஞ்சாப் இரண்டு, தமிழகம் மூன்று, குஜராத் மாநிலம் நான்காவது இடத்தை பிடித்துள்ளன.
மிகப் பெரிய மாநிலங்கள் வரிசையில் மோசமான சுகாதார சேவைகள் உள்ள மாநில வரிசையில், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பீஹார் மற்றும் ஒடிசா இடம் பெற்றுள்ளன.
குறியீட்டின்படி, பெரிய மாநிலங்களில், ஜார்க் கண்ட், ஜம்மு - காஷ்மீர் மற்றும் உத்தர பிரதேசம் ஆகியவை, ஆண்டுதோறும்
அதிகரித்து வரும் செயல்திறன் உடைய மூன்று மாநிலங்கள் பட்டியலில் உள்ளன. சிறிய மாநிலங்களை பொறுத்தவரை, மிசோரத்தை தொடர்ந்து, மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்கள் உள்ளன.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (17)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply