கடும் நிதிநெருக்கடியில் சென்னை பல்கலைக்கழகம் : சான்றிதழ் பாதுகாப்பு கட்டணம் உயர்வு

2018-02-10@ 10:39:42

சென்னை : பாரம்பரியமிக்க சென்னை பல்கலைக்கழகத்திற்கு நிதிநெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிடம் சான்றிதழ் பாதுகாப்பு கட்டணம் 10மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் நிதி நெருக்கடி தொடர்ந்தாள் பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்கமுடியாத நிலை ஏற்படும் என தெரிகிறது.

சென்னை பல்கலைக்கழகம் 1857ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது.மேலும் 5 குடியரசு தலைவர்களை உருவாக்கிய ஒரே பல்கலைக்கழகம் என்ற பெருமையை பெற்றது சென்னை பல்கலைக்கழகம். வரலாற்றில் எப்போதும் இல்லாத வண்ணம் தற்போது சென்னை பல்கலைக்கழகம்  கடும் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளது.

இதற்கு காரணம் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிலையங்கள் மூடப்பட்டது தான் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அரசு கல்லூரிகள் (15)  மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் (30) மேலும் சுயநிதி கல்லூரிகள் (115) என 150க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் செயல்படடு வருகின்றன. இதில் பயிலும் 1500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் பாதுகாப்பு கட்டணமாக அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.1000-ம், அரசு உதவி பெரும் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.2000 கட்டணமாக வசூலிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது

ஏற்கனவே இந்த கட்டணம் ரூ 250 ரூபாயாக  இருந்தது, தற்போது இந்த கட்டணத்தை சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் பலமடங்கு உயர்த்த முடிவுசெய்துள்ளது.  இந்த கட்டண உயர்வால் ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைதூர கல்வி நிலையங்கள் மூடப்பட்டதால் சென்னை பல்கலைக்கழகத்தின் வருமானம் குறைந்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!