திருப்பதி கோயிலில் ஒரே நாளில் ₹2.61 கோடி உண்டியல் காணிக்கை

2018-02-10@ 12:40:26

* 37 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் பக்தர்கள் ₹2.61 கோடியை காணிக்கையாக செலுத்தினர். திருப்பதி கோயிலில் நேற்று அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 15 மணி நேரத்தில் 37 ஆயிரத்து 197 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கான வைகுண்டம் மையத்தில் 26 அறைகளில் பக்தர்கள் 7 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மலைப்பாதை வழியாக நடந்து வந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் நேரடியாக அனுமதிக்கப்பட்டு 1 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். ₹300க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் ₹2.61 கோடியை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!