காலா ரிலீஸ் தேதி(ஏப்.27)அறிவிப்பு | கேரளாவில் வெளியாகும் நாச்சியார் | 4 ஆண்டுகளுக்கு பின் மலையாளத்தில் சுகன்யா | நிவின்பாலியின் நடிப்பை பாராட்டிய பிருத்விராஜ் | முதல்நாளில் ரூ.10.25 கோடி வசூலித்த பேட் மேன் | பிரியங்கா சோப்ராவின் முதல் அசாம் படம் அறிவிப்பு | தில் ஜூங்கிலி ரிலீஸ் தள்ளி வைப்பு | ராசியுடன் மோதும் பிரை டே | தனுஷின் ஹாலிவுட் பட டீஸர் வெளியானது | பிகினியில் சமந்தா : விமர்சித்தவர்களுக்கு பதிலடி |
விஜபி-2 படம் வணிக ரீதியில் தோல்வியடைந்ததால் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடித்து வரும் 'மாரி-2' படத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக தென்காசியில் நடைபெற்றது.
அங்கு நடைபெற்று வந்த படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. விரைவில் 'மாரி-2' படத்தின் இரண்டாம் கட்ட படடப்பிடிப்பை சென்னையில் துவங்க இருக்கிறார்கள். 'பிரேமம்' புகழ் சாய் பல்லவி 'மாரி-2'வில் கதாநாயகியாக நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
இவர்களுடன் கிருஷ்ணா, மலையாள நடிகர் டோவினோ தாம்ஸ், ரோபோ சங்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பை மார்ச் மாதத்திற்குள் முடித்துவிட்டு மே மாதத்தில் மாரி- 2 படத்தை வெளியிட தனுஷ் திட்டமிட்டுள்ளார்.