காலா ரிலீஸ் தேதி(ஏப்.27)அறிவிப்பு | கேரளாவில் வெளியாகும் நாச்சியார் | 4 ஆண்டுகளுக்கு பின் மலையாளத்தில் சுகன்யா | நிவின்பாலியின் நடிப்பை பாராட்டிய பிருத்விராஜ் | முதல்நாளில் ரூ.10.25 கோடி வசூலித்த பேட் மேன் | பிரியங்கா சோப்ராவின் முதல் அசாம் படம் அறிவிப்பு | தில் ஜூங்கிலி ரிலீஸ் தள்ளி வைப்பு | ராசியுடன் மோதும் பிரை டே | தனுஷின் ஹாலிவுட் பட டீஸர் வெளியானது | பிகினியில் சமந்தா : விமர்சித்தவர்களுக்கு பதிலடி |
தலைவன், என்னமோ ஏதோ, கரையோரம், நாரதன் ஆகிய படங்களில் நடித்தவர் நிகிஷா படேல். தமிழை விட தெலுங்கில் அதிகமாக படங்களில் நடித்து வரும் நிகிஷா படேல், தற்போது ஒரு தெலுங்கு படத்தில் ஆக்ஷ்ன் வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் முதன்முறையாக தனக்கு ஒரு ஆக்சன் வேடம் கிடைத்தது குறித்து மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் அவர்.
அதுகுறித்து நிகிஷா படேல் கூறுகையில், நான் எதிலும் துணிச்சலாக செயல்பட விரும்புவேன். அதன்காரணமாகவே தற்காப்பு கலைகளில் பயிற்சி எடுத்துள்ளேன். ஆக்சன் வேடங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது பெரிய ஆசையாக இருந்து வந்தது. அது இப்போது இந்தபடத்தில் தான் நிறைவேறியிருக்கிறது. அந்த வகையில், இந்த படம் மூலம் எனது நீண்டநாள் கனவு நனவாகியிருக்கிறது என்கிறார் நிகிஷா படேல்.