சென்னை: வியாசர்பாடி - பட்டாபிராம் ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் பாதையில் பொறியியல் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் இன்றும், நாளையும் (பிப்.10,11 தேதி) சென்னை - அரக்கோணம் இடையே சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இன்றும் நாளையும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், பயணிகளின் கோரிக்கையை ஏற்று சென்னை-அரக்கோணம் இடையே 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே நேற்று வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இன்று ரத்து செய்யப்படும் மின்சார ரயில்கள்: சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 10.30, 12.00 மணிகளுக்கு புறப்பட்டு கடம்பத்தூருக்கும், மதியம் 12.10, 1.20, 2.00, 2.40, மாலை 3.00 மணிகளுக்கு புறப்பட்டு திருவள்ளூருக்கும், மதியம் 12.20, 1.00, மாலை 3.05 மணிகளுக்கு புறப்பட்டு பட்டாபிராம் சைடிங்குக்கும், மதியம் 12.35, 2.05 மணிகளுக்கு புறப்பட்டு ஆவடிக்கும், பகல் 12.50, 1.40 மணிக்களுக்கு புறப்பட்டு அரக்கோணத்திற்கும், பகல் 2.20, மாலை 3.30 மணிகளுக்கு புறப்பட்டு திருத்தணிக்கும் செல்லும் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படும்.
சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு அரக்கோணத்திற்கும், மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு திருவள்ளூருக்கும், வேளச்சேரியில் இருந்து காலை 11.20 மணிக்கு புறப்பட்டு திருத்தணிக்கும், மதியம் 12.15 மணிக்கு புறப்பட்டு திருவள்ளூருக்கும், மதியம் 12.55 மணிக்கு புறப்பட்டு பட்டாபிராம் சைடிங்குக்கும் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. ஆவடியில் இருந்து காலை 11.05, மதியம் 2.50 மணிகளுக்கும், திருத்தணியில் இருந்து காலை 9.40, மதியம் 1.15 மணிகளுக்கும், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து பகல் 11.25, மதியம் 12.50, 1.40, 2.20, மாலை 3.10, 4.25 மணிகளுக்கும், திருவள்ளூரில் இருந்து காலை 11.25, மதியம் 12.00, 1.05, 2.40, மாலை 3.10, 3.40, 4.45 மணிகளுக்கும், அரக்கோணத்தில் இருந்து காலை 10.50, மதியம் 12.00, 1.50 மணிகளுக்கும், கடம்பத்தூரில் இருந்து மதியம் 1.40 மணிக்கும் புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படும்.
ஆவடியில் இருந்து மதியம் 12.10, 2.40 மணிகளுக்கும், கடம்பத்தூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கும், திருவள்ளூரில் இருந்து மதியம் 1.40 மணிக்கும் புறப்பட்டு வேளச்சேரி செல்லும் மின்சார ரயில்கள் செய்யப்பட்டுள்ளன. அரக்கோணத்தில் இருந்து பகல் 11.20 மணிக்கு புறப்பட்டு ஆவடிச் செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படும்.
நாளை ரத்து செய்யப்படும் மின்சார ரயில்கள்: சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 10.30, 12.00 மணிகளுக்கு புறப்பட்டு கடம்பத்தூருக்கும், மதியம் 12.10, 1.20, 2.00, 2,40, மாலை 3.00 மணிகளுக்கு புறப்பட்டு திருவள்ளூருக்கும், மதியம் 12.20, 1.00, மாலை 3.05 மணிகளுக்கு புறப்பட்டு பட்டாபிராம் சைடிங்குக்கும், மதியம் 12.35, 2.05 மணிகளுக்கு புறப்பட்டு ஆவடிக்கும், மதியம் 12.50, 1.40 மணிக்களுக்கு புறப்பட்டு அரக்கோணத்திற்கும், பகல் 2.20, மாலை 3.30 மணிகளுக்கு புறப்பட்டு திருத்தணிக்கும் செல்லும் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு அரக்கோணத்திற்கும், மதியம் 1.05, மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு திருவள்ளூருக்கும், மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு திருத்தணிக்கும், மதியம் 1.50 மணிக்கு புறப்பட்டு பட்டாபிராம் சைடிங்குக்கும் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
ஆவடியில் இருந்து பகல் 11.05, மதியம் 2.50 மணிகளுக்கும், திருத்தணியில் இருந்து காலை 9.40, மதியம் 1.15 மணிகளுக்கும், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து காலை 11.25, மதியம் 12.50, 1.40, 2.20, மாலை 3.10, 4.25 மணிகளுக்கும், திருவள்ளூரில் இருந்து காலை 10.50, 11.25, மதியம் 12.00, 1.05, 2.40, மாலை 3.10 மணிகளுக்கும், அரக்கோணத்தில் இருந்து காலை 10.50, மதியம் 12.00, 1.50 மணிகளுக்கும், கடம்பத்தூரில் இருந்து மதியம் 1.40 மணிக்கும் புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படும். ஆவடியில் இருந்து மதியம் 12.10, மாலை 4.20 மணிகளுக்கும், கடம்பத்தூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கும், திருவள்ளூரில் இருந்து காலை 11.05, மதியம் 1.40 மணிகளுக்கும் புறப்பட்டு வேளச்சேரி செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அரக்கோணத்தில் இருந்து பகல் 11.20 மணிக்கு புறப்பட்டு ஆவடிச் செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படும்.
இன்றைய சிறப்பு ரயில்கள்
சென்னை சென்்ட்ரலில் இருந்து மதியம் 12.30 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்குக்கும், மதியம் 12.35, 2.40 மணிகளுக்கு புறப்பட்டு ஆவடிக்கும், மதியம் 12.50, 1.45 மணிகளுக்கு புறப்பட்டு அரக்கோணத்திற்கும், மதியம் 2.35 மணிக்கு புறப்பட்டு திருத்தணிக்கும் செல்லும் மின்சார ரயில்களும், அரக்கோணத்தில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு திருத்தணிக்கும், ஆவடியில் இருந்து மாலை 4.00 மணிக்கு புறப்பட்டு திருத்தணிக்கும் சிறப்பு மின்சார ரயில்கள் புறப்பட்டுச் செல்லும். திருத்தணியில் இருந்து மதியம் 1.15 மணிக்கும், அரக்கோணத்தில் இருந்து காலை 10.50, மதியம் 2.40 மணிக்கும், திருவள்ளூரில் இருந்து மதியம் 12.00 மணிக்கும், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து மதியம் 12.50, மாலை 3.30 மணிகளுக்கும், ஆவடியில் இருந்து மதியம் 12.15, 1.35, மாலை 3.40 மணிகளுக்கும் சிறப்பு மின்சார ரயில்கள் புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வந்து சேரும். திருத்தணியில் இருந்து காலை 9.40 மணிக்கு அரக்கோணத்திற்கும், ஆவடியில் இருந்து காலை 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கும், அரக்கோணத்தில் இருந்து காலை 11.20 மணிக்கு புறப்பட்டு ஆவடிக்கும் சிறப்பு மின்சா ரயில்கள் இயக்கப்படும்.
நாளைய சிறப்பு ரயில்கள்
சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 12.30 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்குக்கும், மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு ஆவடிக்கும், மதியம் 12.50, 1.45 மணிகளுக்கு புறப்பட்டு அரக்கோணத்திற்கும், ஆவடியில் இருந்து மாலை 3.00, 4.00 மணிகளுக்கு புறப்பட்டு திருத்தணிக்கும், அரக்கோணத்தில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு திருத்தணிக்கும் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும். திருத்தணியில் இருந்து காலை 9.40 மணிக்கு அரக்கோணத்திற்கும், ஆவடியில் இருந்து காலை 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கும், அரக்கோணத்தில் இருந்து காலை 11.20 மணிக்கு புறப்பட்டு ஆவடிக்கும், திருத்தணியில் இருந்து மதியம் 1.25 மணிக்கு புறப்பட்டு ஆவடிக்கும் சிறப்பு மின்சா ரயில்கள் இயக்கப்படும்.
திருத்தணியில் இருந்து மதியம் 1.15 மணிக்கும், அரக்கோணத்தில் இருந்து காலை 10.50, மதியம் 12.00, 2.40 மணிகளுக்கும், திருவள்ளூரில் இருந்து மதியம் 12.00 மணிக்கும், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து மதியம் 12.50, 3.30 மணிகளுக்கும், ஆவடியில் இருந்து மதியம் 12.15, 1.35, 2.40 மணிகளுக்கும் சிறப்பு மின்சார ரயில்கள் புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.
விரைவு ரயிலாக மாற்றம்
அரக்கோணத்தில் இருந்து இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு இரவு 11.10 மணிக்கு ஆவடிச் செல்லும் மின்சார ரயில், இனிமேல் இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணிக்கு சென்றடையும். மேலும், அரக்கோணம் - ஆவடி இடையே உள்ள அனைத்து ரயில்களிலும் நின்றுச் சென்ற இந்த ரயில், விரைவு மின்சார ரயிலாக மாற்றப்பட்டுள்ளது. அதனால் இந்த ரயில் இனிமேல் திருவலங்காடு (இரவு 11.30 மணி), கடம்பத்தூர் (இரவு 11.40 மணி), திருவள்ளூர் (இரவு 23.44 மணி) ரயில் நிலையங்களில் மட்டும் நிற்கும்.
நெரிசலை தவிர்க்க 12 பெட்டி மின்சார ரயில் அறிமுகம்
தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வால், மக்கள் மின்சார ரயில்களை நாடுகின்றனர். இதனால், சென்னையில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் கூட்டம் அலைமோதுவதால், பயணிகள் ஆபத்தான நிலையில் தொங்கியபடி செல்கின்றனர். இதனால், மின்சார ரயில்களில் கூடுதல் பெட்டி இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர் என்று கடந்த 5ம் தேதி தினகரன் நாளிதழில் விரிவாக செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சென்னை-அரக்கோணம் வழித்தடத்தில் 12 பெட்டிகளை கொண்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, ஆவடி- சென்னை சென்ட்ரல் ரயில் காலை 5.25 மணிக்கும், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் ரயில் காலை 6.45 மணிக்கும், அரக்கோணம்- சென்ட்ரல் ரயில் காலை 8.55 மணிக்கும், சென்ட்ரல் -அரக்கோணம் ரயில் காலை 11.05 மணிக்கும், அரக்கோணம்-சென்ட்ரல் ரயில் மதியம் 1.50 மணிக்கும், சென்ட்ரல் -அரக்கோணம் ரயில் மாலை 4.00 மணிக்கும், சென்ட்ரல்- திருத்தணி ரயில் இரவு 8.20 மணிக்கும், திருத்தணி-அரக்கோணம் ரயில் இரவு 11.00 மணிக்கும், அரக்கோணம்-ஆவடி ரயில் இரவு 11.20 மணிக்கும் 12 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.
பறக்கும் ரயில்களும் ரத்து
சென்னை கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் இன்றும், நாளையும் (பிப்.10, 11) ரயில் பாதையில் பொறியியல் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளன. அதனால் பிப்.10ம் தேதி சனிக்கிழமை சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே காலை 9.50 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், வேளச்சேரி - சென்னை கடற்கரை இடையே காலை 9.50 மணி முதல் மாலை 4.10 மணி வரையிலும் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படும். அதேபோல் பிப்.11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே காலை 9.50 மணி முதல் மாலை 4.20 மணி வரையிலும், வேளச்சேரி - சென்னை கடற்கரை இடையே காலை 9.50 மணி முதல் மாலை 4.10 மணி வரையிலும் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.