காலா ரிலீஸ் தேதி(ஏப்.27)அறிவிப்பு | கேரளாவில் வெளியாகும் நாச்சியார் | 4 ஆண்டுகளுக்கு பின் மலையாளத்தில் சுகன்யா | நிவின்பாலியின் நடிப்பை பாராட்டிய பிருத்விராஜ் | முதல்நாளில் ரூ.10.25 கோடி வசூலித்த பேட் மேன் | பிரியங்கா சோப்ராவின் முதல் அசாம் படம் அறிவிப்பு | தில் ஜூங்கிலி ரிலீஸ் தள்ளி வைப்பு | ராசியுடன் மோதும் பிரை டே | தனுஷின் ஹாலிவுட் பட டீஸர் வெளியானது | பிகினியில் சமந்தா : விமர்சித்தவர்களுக்கு பதிலடி |
காற்று வெளியிடை படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கும் புதிய படம் பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்தது. தற்போது அவரது அடுத்த படம் பற்றிய தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தின் தலைப்பு செக்கச்சிவந்த வானம். தெலுங்கு மற்றும் இந்தியில் நவாப் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைகா புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதில் விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூரலிகான், ஜெயசுதா, அதிதிராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் பகத்பாசில் நடிப்பதாக இருந்தது தற்போது அவருக்கு பதிலாக அரவிந்த்சாமி சேர்க்கப்பட்டுள்ளார்.
மணிரத்னத்தின் ஆஸ்தான இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். திலீப் சுப்பாராயன் சண்டை காட்சிகளை அமைக்கிறார் கதை, திரைக்கதை, வசனத்தை சிவா ஆனந்துடன் இணைந்து மணிரத்னம் எழுதியிருக்கிறார். திங்கள் கிழமை இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.