ரமல்லா : பாலஸ்தீனம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியிடம், இஸ்ரேலுடனான பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண உதவும்படி, அந்த நாட்டு அதிபர் மஹ்மூது அப்பாஸ் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, ''பேச்சுவார்த்தை மூலம், அமைதியான சூழலில், பாலஸ்தீனம் விரைவில் சுதந்திர நாடாகும்,'' என, பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேற்காசியாவின், பாலஸ்தீனம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் ஆகிய நாடுகளுக்கு, மூன்று நாள் பயணமாக, பிரதமர் மோடி, நேற்று முன்தினம், டில்லியிலிருந்து புறப்பட்டுச் சென்றார். பாலஸ்தீனம் செல்லும் வழியில், ஜோர்டான் தலைநகர் அம்மானில் இறங்கினார். அவரை, அந்நாட்டு பிரதமர், ஹனி அல்-முல்கி வரவேற்றார். தொடர்ந்து, ஜோர்டான் மன்னர், இரண்டாம் அப்துல்லாவை சந்தித்து பேசினார்.
5 ஒப்பந்தங்கள்
நேற்று காலை ஜோர்டானிலிருந்து, அந்நாட்டு ராணுவ ஹெலிகாப்டரில், பாலஸ்தீனத்துக்கு பிரதமர் மோடி சென்றார். பாலஸ்தீன தலைநகர் ரமல்லாவில், பிரதமர் மோடியை, அந்நாட்டு பிரதமர், ரமி ஹம்தல்லா வரவேற்றார்.
தொடர்ந்து, ரமல்லாவில் உள்ள அதிபர் மாளிகைக்கு, மோடி சென்றார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடியை, பாலஸ்தீன அதிபர், மஹ்மூது அப்பாஸ் வரவேற்றார். இரு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன.
நீண்ட கால உறவு
பேச்சு மூலம், இந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம். இந்தியா மற்றும் பாலஸ்தீனம் இடையேயான உறவுகள், நீண்ட காலம் வரை நிலைத்து நின்றுள்ளன.இவ்வாறு மோடி கூறினார். முன்னதாக பிரதமர் மோடி, பாலஸ்தீன தலைவர், யாசர் அராபத்தின் சமாதிக்கு சென்று, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன், பாலஸ்தீன அதிபர், அப்பாசும் சென்றிருந்தார்.
தொடர்ந்து, யாசர் அராபத் அருங்காட்சியகத்துக்கு, பிரதமர் மோடி சென்றார். இதன்பின், பாலஸ்தீனத்திலிருந்து புறப்பட்ட மோடி, நேற்றிரவு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சென்றார்.
பாலஸ்தீனத்துக்கு இதுவரை, இந்திய பிரதமர்கள் யாரும் சென்றதில்லை. ௨௦௧௫ல், அப்போதைய ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி சென்றார். பிரதமர் மோடி, கடந்தாண்டு இஸ்ரேலுக்கு சென்றார். அப்போது, பாலஸ்தீனத்துக்கு அவர் செல்லவில்லை. இதனால், இந்திய - பாலஸ்தீன உறவில், விரிசல் ஏற்படுமோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் இம்முறை, பாலஸ்தீனத்துக்கு சென்ற மோடி, இஸ்ரேலுக்கு செல்லவில்லை. இதன் மூலம், இஸ்ரேலையும், பாலஸ்தீனத்தையும், இந்தியா சமமாகவே பார்க்கிறது என்பதை, மோடி தெளிவுப்படுத்தினார். பாலஸ்தீனத்துக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற கவுரவமும், மோடிக்கு கிடைத்தது.
பாலஸ்தீன நாட்டின் உயரிய, 'கிராண்ட் காலர்' விருது, பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. பாலஸ்தீன அதிபர், அப்பாஸ், இதை வழங்கினார். வெளிநாட்டைச் சேர்ந்த அரசர்கள், தலைவர்கள் மற்றும் அதற்கு இணையான பதவி வகிப்போருக்கு வழங்கப்படும், உயரிய விருது இது. இதற்கு முன், சவுதி அரேபிய மன்னர் சல்மான், பஹ்ரைன் நாட்டின் மன்னர் ஹமாத், சீன அதிபர் ஜீ ஜின்பிங் உட்பட, பலருக்கு இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது.
பாலஸ்தீனத்திற்கு செய்யும் உதவிகள்
* 190 கோடி ரூபாயில், அதி நவீன மருத்துவமனை* 32 கோடி ரூபாயில், பெண்கள் மேம்பாட்டு மையம்* 32 கோடி ரூபாயில், தேசிய அச்சகத்துக்கு கருவிகள்* கல்வித்துறை மேம்பாட்டு நிதியுதவி
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (2)
Reply
Reply