துணை சுகாதார நிலையங்களை தனியார்மயமாக்க வாசன் எதிர்ப்பு

2018-02-10@ 01:00:22

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:சுகாதாரத்துறையில் அரசின் கவனம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். நாடு முழுவதும் 1 லட்சத்து 56 ஆயிரத்து 708 துணை சுகாதார நிலையங்கள் அரசாங்கத்தால் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் மேற்கொள்ளப்படும் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த துணை சுகாதார நிலையங்களை தனியார் மயமாக்க மத்திய பா.ஜ. அரசு திட்டமிட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. துணை சுகாதார நிலையங்களை தனியாரிடம் வழங்கினால் கிராமப்புற ஏழை, எளிய மக்கள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள். என்பதை மத்திய பா.ஜ. அரசு கவனத்தில் கொண்டு இந்த முடிவை திரும்ப பெற வேண்டும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!