ஒட்டன்சத்திரம் ஓட்டல்களில் கலப்பட எண்ணெய் பயன்பாடு அதிகரிப்பு

2018-02-10@ 12:35:35

* அதிகாரிகள் கண்டும், காணாமல் இருப்பதாக புகார்

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் பகுதி ஓட்டல், டீக்கடைகளில் கலப்பட எண்ணெய் பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகளில் கலப்பட எண்ணெய் பயன்பாடு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெரிய மற்றும் சிறிய அளவிலான ஓட்டல்கள், டீ கடைகள் அதிகளவில் உள்ளன. இங்கு பஜ்ஜி, போண்டா, மிக்சர், காராபூந்தி உள்ளிட்ட எண்ணெய் பலகாரங்கள் தயாரிக்க கலப்பட எண்ணெய் பயன்படுத்துவதாக வருவதாக புகார் எழுந்துள்ளது.
மேலும் பயன்படுத்திய எண்ணெய்யையே மீண்டும் பயன்படுத்துவதாகவும், தயாரித்த பலகாரங்களை மூடாமல் ஈக்கள் மொய்க்க விடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதனால் அவற்றை சாப்பிடுபவர்களுக்கு கேன்சர், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் ஏற்கனவே புகார்கள் அனுப்பியுள்ளனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் கண்டும், காணாமல் உள்ளனர். எனவே கலப்பட எண்ணெய் பயன்பாட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!