மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள அனியாப்பூரில் பழைய இரும்புக்கடை நடத்தி வருபவர் ராமநாதன் (29). நேற்று மாலை இவரது கடையில் வெடிக்காத சிறு குண்டை அதிலுள்ள ஈயத்தை பிரிப்பதற்காக இரும்பு சுத்தியலால் அடித்து பிரிக்க முயன்றபோது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் ராமநாதன் மற்றும் அருகில் உட்கார்ந்து பழைய பொருட்களை பிரித்து கொண்டிருந்த நவீன்(15), கோபாலகிருஷ்ணன் (15) உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அருகிலுள்ளவர்கள் 3 பேரையும் மீட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.இந்தசம்பவம் குறித்து வையம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.