புதுக்கோட்டை: டெங்கு அதிக இடங்களில் பரவியபோது அதை கட்டுப்படுத்திய மாநிலம் தமிழகம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். தமிழகம் மட்டுமே டெங்கு குறித்த உண்மை அறிக்கையை மத்திய அரசிடம் அளித்துள்ளதால் உயிரிழப்பு அதிகமாக தெரிகிறது என அவர் தெரிவித்துள்ளார். நோய்களை கண்டறிய தமிழகம் முழுவதும் 385 ஒன்றியங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.