புதுடில்லி : 'நீதிபதி லோயா மரணம் குறித்து, எஸ்.ஐ.டி., எனப்படும், சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும்' என, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்திடம், காங்., தலைவர், ராகுல் தலைமையில், எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
குஜராத்தில் நடந்த சொராபுதீன், போலி, 'என்கவுன்டர்' வழக்கை விசாரித்து வந்த, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, பி.எச்.லோயா, 2014, நவ., ௧ல் இறந்தார்; மஹாராஷ்டிர மாநிலம், நாக்பூரில், தன் நண்பர் மகளின் திருமணத்தில் பங்கேற்க, அவர் சென்றிருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
வழக்கு:
லோயாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ள
எதிர்க்கட்சிகள், இது பற்றி, எஸ்.ஐ.டி., எனப்படும், சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் என கோரி வருகின்றன. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீதிபதி, லோயா மரணம் பற்றி, சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரி, காங்., தலைவர், ராகுல் தலைமையில், எதிர்க்கட்சியினர், டில்லியில், ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்தை நேற்று சந்தித்து, மனு கொடுத்தனர்.
பின், நிருபர்களிடம் ராகுல் கூறியதாவது: நீதிபதி லோயா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக, லோக்சபா மற்றும் ராஜ்யசபா, எம்.பி.,க்கள், தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, விசாரணை நடத்த, சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும். சந்தேகமான முறையில், நீதிபதி ஒருவர் மரணமடைந்துள்ளார். இது குறித்து, முறையாக விசாரணை நடத்துவது, அவருக்கும், அவரதுகுடும்பத்தினருக்கும் ஆறுதலாக இருக்கும்.
நல்ல பதில்:
ஜனாதிபதியிடம் அளித்த மனுவில், 114 எம்.பி.,க்கள் மற்றும், 15 கட்சிகள் கையெழுத்து போட்டுள்ளனர்.
எங்கள் கோரிக்கை குறித்து, ஜனாதிபதி, நல்ல பதில் அளித்துள்ளார். இவ்வாறு ராகுல் கூறினார்.
காங்,, மூத்த தலைவர், கபில் சிபல் கூறியதாவது: '2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. அது போல், நீதிபதி லோயா மரணம் குறித்து விசாரிக்கவும், சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும். எங்களுக்கு, சி.பி.ஐ., மற்றும், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்புகள் மீது நம்பிக்கையில்லை. அதனால், சிறப்பு புலனாய்வு குழுவில், சி.பி.ஐ., மற்றும், என்.ஐ.ஏ.,வை சேர்ந்த யாரும் இடம் பெற கூடாது. சுதந்திரமான விசாரணை நடத்தப்பட்டால் மட்டுமே, உண்மை தெரிய வரும். இவ்வாறு கபில் சிபல் கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (13+ 19)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply