ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் ராணுவ முகாம் மீது இன்று அதிகாலை பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்மு மாவட்டம் சுன்ஜவான் பகுதியில் ராணுவ முகாம் உள்ளது. இந்த முகாம் மீது இன்று அதிகாலை பயங்கரவாதிகள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினர் பதில் தாக்குல் நடத்தினர். இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் சூழப்பட்டுள்ளது.