தேவைப்பட்டால் துல்லியத் தாக்குதல் நடத்தும் வலிமை இந்தியாவுக்கு உள்ளது: மத்தியமைச்சர் ஸ்மிருதி இராணி

2018-02-10@ 20:45:06

மும்பை: தேவைப்பட்டால் துல்லியத் தாக்குதல் நடத்தும் வலிமை இந்தியாவுக்கு உள்ளது என மத்தியமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார். எல்லை தாண்ட முயற்சிப்போரை தடுத்து நிறுத்தும் வல்லமை இந்தியாவுக்கு உள்ளது, சகிப்புத்தன்மைமிக்க நாடு என்பதால் பொறுமை காத்து வருகிறோம் என்றும் கூறியுள்ளார். நமது நண்பர்களை மாற்ற முடியும், ஆனால் அண்டை வீட்டாரை ஒருபோதும் மாற்ற இயலாது என்றும் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!