சிம்பு படத்தின் கதையிலா சூர்யா? | மே மாதம் திரைக்கு வரும் மாரி- 2 | காதலர் தினத்தில் ஜூங்கா சிங்கிள் டிராக் | சர்ச்சையை கிளப்ப வரும் 'சிவா மனசுல புஷ்பா' | 'சண்டக்கோழி-2' ரிலீஸ் தேதி விஷாலின் கையில் | சாய் பல்லவியின் வித்தியாசமான கெட்டப் | நிகிஷா படேலின் கனவை நனவாக்கிய படம் | மீனுக்கும், மரத்துக்கும் டப்பிங் கொடுத்த ரவிதேஜா - நானி | திருமண வதந்தியில் சிக்கிய விஜய் சேதுபதி படநாயகி | பிப்ரவரி 13-ல் ரங்கஸ்தலம் முதல் பாடல் வெளியீடு |
தானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவுடன் ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 15 நாட்களாக சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது. இந்த படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்து விட்டநிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வருகின்றனர். இதற்கிடையில் இப்படத்திற்கு இசை அமைக்கும் யுவன் சங்கர் ராஜா ட்யூன்களை தயார் பண்ணி வருகிறார்.
சிம்புவை வைத்து செல்வராகவன் இயக்கி பிறகு ட்ராப்பான கான் படத்தின் கதையைத்தான் தற்போது சூர்யாவை வைத்து இயக்குவதாக தகவல் படத்துறையில் அடிபடுகிறது.
இது பற்றி தயாரிப்பு தரப்பில் விசாரித்தால், கான் படத்தின் கதைக்கும் இந்தப் படத்தின் கதைக்கும் சம்மந்தமில்லை. யாரடி நீ மோகினி படத்தைப்போன்றதொரு படம் இது என்கிறர்கள்.