நேரடி வரி வசூல் 6.95 லட்சம் கோடி

2018-02-10@ 02:03:30

புதுடெல்லி: மத்திய அரசுக்கு நடப்பு நிதியாண்டில் நேரடி வரியாக கடந்த மாதம் வரை ரூ.6.95 லட்சம் கோடி வசூல் ஆகியுள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் வசூல் ஆனதை விட 19.3 சதவீதம் அதிகம். நிறுவன வருமான வரி வசூல் 19.2 சதவீதமும், தனிநபர் வருமான வரி வசூல் 18.6 சதவீதமும் அதிகரித்துள்ளது. 2017-18 நிதியாண்டில் நேரடி வரி வருவாய் 10.05 லட்சம் கோடியாக இருக்கும் என மறு மதிப்பீடு செய்யப்பட்டது.இதில் கடந்த 10 மாதங்களில் மட்டும் வசூலான தொகை 69.2 சதவீதம்.  இந்த 10 மாதங்களில் ரீபண்ட்டாக 1.26 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!