ஆவடி தொழிற்சாலையை மூடும் முடிவை கைவிட வேண்டும் சரத்குமார் வலியுறுத்தல்

2018-02-10@ 00:14:16

சென்னை: சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை:  மத்திய அரசின் பாதுகாப்புத்துறை எடுத்திருக்கும் கொள்கை முடிவுகளால், சென்னை ஆவடியில் ராணுவ படையினருக்கான உடை தயாரிக்கும் தொழிற்சாலை மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இத்தொழிற்சாலையில் தற்போது 811 பெண்கள் உட்பட, 2121 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். எனவே, ஆவடி ராணுவ சீருடை தயாரிக்கும் தொழிற்சாலையை மூடும் முடிவை கைவிடவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!