சென்னை: சென்னை அம்பத்தூரில் பயங்கர ஆயுதங்கள் உடன் கூலிப்படையைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பாளையங்கோட்டையைச் சேர்ந்த செல்வராஜ், கணேஷ், செல்வகுமார் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் துணை ஆய்வாளர் ஒருவரை கொலை செய்ய சென்னை வந்ததாக தகவல் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.