சென்னை: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்தியை தாய் மொழியாக கொண்ட 24 மாணவர்களுக்கு, தமிழ் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராயபுரம் அரசு உதவி பெறும் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் பிரியா சிங் உள்ளிட்ட 24 மாணவர்கள் சார்பில் தொடர்ந்த வழக்கில் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.