பெங்களூரு: கர்நாடகாவில் இன்று முதல் 13ம் தேதி வரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பயணம் மேற்கொள்கிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று கர்நாடகா வருகிறார். பல்லாரி வரும் ராகுல், பிற்பகல் 2.30 மணிக்கு ஒசபேட்டை தாலுகாவில் நடக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மாநாட்டில் உரையாற்றுவதன் மூலம் பிரசாரத்தை தொடங்குகிறார். 12ம் தேதி ரெய்ச்சூர், யாதகிரி, கல்புர்கி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 13ம் தேதி கல்புர்கி, பீதர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.